கல்லூரி மாணவியை 8 மாத கர்ப்பமாக்கிய காதலன்


கல்லூரி மாணவியை 8 மாத கர்ப்பமாக்கிய காதலன்
x
தினத்தந்தி 18 March 2023 12:15 AM IST (Updated: 18 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் தனியாக இருந்தபோது காதலன் உல்லாசம் அனுபவித்ததால் கல்லூரி மாணவி கர்ப்பமானார். இவரை பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்துவந்தபோது போலீசில் சிக்கினார்.

கடலூர்

கடலூர்:

கடலூர் உச்சிமேட்டை சேர்ந்தவர் ஆனந்தன் மகன் முத்தமிழன் (வயது 23). பெயிண்டர். இவரும் கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படிக்கும் 17 வயதுடைய மாணவியும் காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், முத்தமிழன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவருடன் பலமுறை உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இதில் மாணவி தற்போது 8 மாத கர்ப்பமாக உள்ளார். இதுபற்றி அறிந்த முத்தமிழன், மாணவியை கடந்த மாதம் 10-ந் தேதி தென்னம்பாக்கம் அழகர் கோவிலுக்கு அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டார்.

போலீசார் விசாரணை

இந்த நிலையில் மாணவியை பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு முத்தமிழன் அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த டாக்டர்கள், கர்ப்பிணியான மாணவிக்கு 17 வயதே ஆனதால் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையிலான போலீசார், ஆஸ்பத்திரி சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினர். பின்னர் மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், முத்தமிழன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story