கால்பந்து பயிற்சி பெற சிறுவர்கள் ஆர்வம்
கால்பந்து பயிற்சி பெற சிறுவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி நகரின் மையப்பகுதியில் காந்தி மைதானம் உள்ளது. நீலகிரி மாவட்ட கால்பந்து கழகத்தில் பதிவு செய்துள்ள அணிகளுக்கு இடையேலீக் போட்டிகளும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது. மேலும் தனியார் கால்பந்து அகாடமிகளிலும் இணைந்து சிறுவர்கள் தகுதி பெற்ற பயிற்சியாளர்களிடம் ஆர்வத்துடன் பயிற்சி பெற்று வருகின்றனர். காலை 7 மணி முதல் 9 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் சிறுவர்களுக்கு கால்பந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் காலையில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் கால்பந்து மற்றும் கூடைப்பந்து விளையாடி வருகின்றனர். இதனால் கோத்தகிரி காந்தி மைதானம் கால்பந்து வீரர்கள் மற்றும் சிறுவர்களால் களைகட்டி காணப்படுகிறது.
இதுகுறித்து பயிற்சியாளர் ராஜ்குமார் கூறும்போது, சிறுவர்கள் கால்பந்து விளையாட்டில் பயிற்சி பெற ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் அவர்கள் விடுமுறை நாட்களில் செல்போன் பயன்பாடு மற்றும் தீய செயல்களில் ஈடுபடாமல் இருப்பதுடன், அவர்களின் விளையாட்டு திறமை, ஆரோக்கியம் மேம்படும் என்றார்.