இரவில் பூத்த பிரம்ம கமல பூ


இரவில் பூத்த பிரம்ம கமல பூ
x
தினத்தந்தி 24 Jun 2023 1:00 AM IST (Updated: 24 Jun 2023 5:33 PM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் பிரம்ம கமலப் பூ பூத்தது

தேனி

தேனி மாவட்டம் கம்பம் மணிநகரத்தை சேர்ந்தவர் ஷாலினி. இவரது வீட்டுத் தோட்டத்தில் ஆண்டுக்கு ஒரு முறை பூ பூக்கும் பிரம்ம கமல செடி வைத்து வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அந்த செடியில் பிரம்ம கமல பூக்கள் பூத்தது. மற்ற செடிகள் போல் இல்லாமல் பிரம்ம கமல செடியில் இலையில் இருந்து பூக்கள் பூக்கும். இது பார்ப்பதற்கு பிரம்மனின் நாபிக்கமலத்தில் தோன்றுவது போல் காணப்படும். இதனால் தான் பிரம்ம கமல பூ என்று அழைக்கின்றனர். இந்த பூவுக்கு மற்றொரு பெயர் நிஷாகாந்தி பூ என்றும் அழைக்கின்றனர். இதனை சீனர்கள் அதிசய பூவாக கருதி வழிபடுகின்றனர். இந்த பூ மருத்துவ குணமும், தெய்வீகம் தன்மையும் கொண்டது. பிரம்ம கமல பூ மலரும் நேரத்தில் தரிசித்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த பூவை அப்பகுதி மக்கள் வந்து பார்த்து சென்றனர்.


Next Story