இரும்பேடு பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா


இரும்பேடு பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா
x

இரும்பேடு பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி இரும்பேடு ஏ.சி.எஸ். நகரில் ஏ.சி.எஸ். கல்வி குழுமத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்ட பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கோவில் வளாகத்தில் புனிதநீர் நிரப்பப்பட்ட கலசங்கள் வைத்து சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்பட்டன.

அதைத் தொடர்ந்து உற்சவர் தாயார், ஆண்டாள் அம்மன், பெருமாள் மலரால் அலங்கரிக்கப்பட்டு கோவில் வளம் வந்து, பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மங்கள வாத்தியத்துடன் கொடியேற்றப்பட்டது.

விழாவில் ஏ.சி.எஸ். கல்வி குழும தலைவர் லலிதா லட்சுமி சண்முகம், ஏ.சி.எஸ். கல்வி குழும நிறுவனர் ஏ.சி.சண்முகம், கல்வி குழும செயலாளர்கள் ஏ.சி.பாபு, ஏ.சி.ரவி, முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவையொட்டி தினமும் காலை, மாலை இருவேளையும் உற்சவர் சாமியை அலங்கரித்து கோவில் வலம் நடைபெறுகிறது. பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 1-ந்தேதி கருட சேவை உற்சவம் நடக்கிறது.


Next Story