வைகுண்டவாச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா


வைகுண்டவாச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா
x
தினத்தந்தி 28 May 2023 12:15 AM IST (Updated: 28 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரத்தில் பிரசித்தி பெற்ற வைகுண்டவாச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோவில் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. பின்னர் இரவு 8 மணிக்கு சாமி திருவீதியுலா நடந்தது. தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் சாமி திருவீதி உலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 1-ந் தேதி திருக்கல்யாணமும், 3-ந் தேதி தேரோட்டமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கார்த்திகேயன், ஆய்வாளர் லட்சுமி, அர்ச்சகர் கோபால் பட்டாச்சாரியார் மற்றும் நிர்வாகக்குழுவினர் செய்து வருகின்றனர்.


Next Story