ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா


ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா
x

ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா

திருப்பூர்

தளி

உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட தில்லை நகரில் ரத்னாம்பிகை உடனமர் ரத்தினலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் விநாயகர், முருகன், பிரம்மா, துர்க்கைஅம்மன், ஆழ்வார்கள், அய்யப்பசாமி, காலபைரவர், நவக்கிரகங்கள் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். இந்த கோவிலில் சித்திரை மாத பிரதோஷத்தை யொட்டி நேற்று மூலவர், உற்சவர், நந்தி உள்ளிட்ட கடவுள்களுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அப்போது சந்தனம், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், பால், மஞ்சல், இளநீர், பழரசம், தேன், பஞ்சாமிர்தம், பன்னீர், கரும்புச்சர்க்கரை, சந்தனாதி தைலம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

---------------


Next Story