மீனவர் வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகை-பணம் கொள்ளை
வெள்ளிச்சந்தை அருகே ஈஸ்டர் பண்டிகை பிரார்த்தனைக்கு சென்ற மீனவர் வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
ராஜாக்கமங்கலம்:
வெள்ளிச்சந்தை அருகே ஈஸ்டர் பண்டிகை பிரார்த்தனைக்கு சென்ற மீனவர் வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
மீனவர்
வெள்ளிச்சந்தை அருகே உள்ள பிள்ளைதோப்பு வின்சென்ட் நகரை சேர்ந்தவர் ரூபன் (வயது 45), மீனவர். இவர் சம்பவத்தன்று இரவு வீட்டின் கதவை பூட்டி விட்டு அருகில் உள்ள ஆலயத்துக்கு ஈஸ்டர் பண்டிகையையொட்டி பிரார்த்தனைக்கு சென்றார்.
சிறிது நேரத்தில் ரூபன் இயற்கை உபாதையை கழிக்க வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது அவரது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தார்.
நகை-பணம் கொள்ளை
உடனே அவர் உள்ளே சென்று பார்த்த போது, அங்கு பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.17 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. ஆலயத்துக்கு சென்று இருந்த போது யாரோ மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இதுபற்றி ரூபன் வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.