தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து டிவி-சில்வர் பொருட்கள் திருட்டு


தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து டிவி-சில்வர் பொருட்கள் திருட்டு
x

தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து டிவி-சில்வர் பொருட்கள் திருட்டு நடந்துள்ளது.

கரூர்

கரூர் அருகே உள்ள வடக்குபாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 45). இவர் கரூரில் டெக்ஸ்டைல் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு எல்.இ.டி. டிவி, சில்வர் பொருட்கள் என மொத்தம் ரூ.50 ஆயிரம் பொருட்களை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து சந்திரசேகர் கொடுத்த புகாரின்பேரில், பசுபதிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் வழக்குப்பதிந்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்.


Next Story