வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு


வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
x
சேலம்

கொண்டலாம்பட்டி:-

சேலம் ஜாரிகொண்டலாம்பட்டியை சேர்ந்த சவுண்டேஸ்வரி (வயது 70) என்பவர், அந்த பகுதியில் உள்ள தன்னுடைய மகள் வீட்டுக்கு சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. வீட்டில் பீரோவில் இருந்த 10 ஆயிரம் ரூபாய் திருட்டு போய் இருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சவுண்டேஸ்வரி வீட்டில் திருடியவர்களை தேடி வருகின்றனர்.


Next Story