கடையில் பூட்டை உடைத்து ரூ.60 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு


கடையில் பூட்டை உடைத்து   ரூ.60 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு
x

தூத்துக்குடியில் கடையில் பூட்டை உடைத்து ரூ.60 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை திருடிய மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி முனியசாமிபுரம் 1-வது தெருவை சேர்ந்தவர் சிவலிங்கம். இவருடைய மகன் லிங்கம் (வயது 56). இவர் புதுக்கோட்டை பைபாஸ் ரோட்டில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று மதியம் இவர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றாராம். நேற்று முன்தினம் மீண்டும் கடையை திறக்க வந்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கடையின் உள்ளே சென்று பார்த்தாராம். அங்கு இருந்த ஒயர்கள், பூட்டுகள், பெயிண்ட் உள்ளிட்ட ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர் திருடி சென்று இருப்பது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story