கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
உடன்குடியில் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி
உடன்குடி:
உடன்குடி சாதரக்கோன்விளை மெயின் ரோட்டில் முப்பந்தரத்து இசக்கி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், சாமிக்கு பயன்படுத்தும் பொட்டு தாலி, கண்மலர், பித்தளை விளக்குகள் ஆகியவற்றை திருடினர். மேலும் உண்டியல் பெட்டியை எடுத்து சென்று, அதை உடைத்து பணத்தை எடுத்துக் கொண்டு, பெட்டியை மெயின் ரோட்டில் வீசி விட்டு சென்று விட்டனர். கோவிலில் உண்டியல் பணம் ஆண்டுக்கு ஒரு முறை கோவில் கொடை விழாவின்போது மட்டுமே திறந்து எண்ணப்படும். உண்டியலில் எவ்வளவு பணம் இருந்தது என்பது தெரியவில்லை. இதுகுறித்து கோவில் நிர்வாகி ராஜபாண்டி கொடுத்த புகாரின் பேரில், குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story