கடையின் கூரையை உடைத்து பணம் திருட்டு
கடையின் கூரையை உடைத்து பணத்தை திருடி சென்றனர்.
விருதுநகர்
சிவகாசி,
சிவகாசி - விருதுநகர் ரோட்டில் உள்ள ஒரு வீட்டு உபயோகப்பொருட்கள் விற்பனை நிலையத்தின் பின் பகுதியில் உள்ள மேற்கூரையை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் கடையில் இருந்த செல்போன்கள், ரொக்கப் பணம் ரூ.1 லட்சத்து 42 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடையின் உரிமையாளர் செய்யது அபுதாகீர் சிவகாசி டவுன் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சிவகாசி பகுதியில் தொடர்ந்து திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடந்து வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story