கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு


கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
x

கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

விருதுநகர்

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி நெடுங்கரைப்பட்டி தெருவில் பாலவரத விநாயகர் கோவில் உள்ளது. இங்கு கோவில் பூசாரியான மீனாட்சி சுந்தரம் வழக்கம்போல் பூஜைகளை முடித்துவிட்டு இரவில் கோவிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார். மீண்டும் நேற்று முன் தினம் காலையில் கோவில் கதவை திறந்து பார்த்தபோது உள்ளே இருந்த கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பந்தல்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.


Next Story