குழித்துறையில் குடிநீர் குழாயில் உடைப்பு; அதிகாரிகள் முற்றுகை


குழித்துறையில் குடிநீர் குழாயில் உடைப்பு; அதிகாரிகள் முற்றுகை
x

குழித்துறையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

கன்னியாகுமரி

குழித்துறை,

குழித்துறையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

முற்றுகை

குழித்துறை கல்பாலத்தடி பகுதியில் இருந்து குழித்துறை சந்திப்பு வரை புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்றன. அப்போது அந்த பகுதியில் உள்ள பழைய குடிநீர் குழாய் உடைந்தது. இதனால் அந்த பகுதியில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.

பின்னர் அதனை உடனடியாக சீரமைக்கும்படி குழித்துறை நகராட்சி சார்பில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து குழித்துறை குடிநீர் வடிகால் வாரிய என்ஜினீயர் ஹரி கோவிந்தன் தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். இதனை அறிந்த குழித்துறை நகராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்களுடன் சென்று அதிகாரிகளை முற்றுகையிட்டனர். பின்னர் சேதமடைந்த குடிநீர் குழாயை சீரமைக்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதனை தொடர்ந்து ஒப்பந்ததாரரை வரவழைத்து சீரமைக்கும் பணி நடந்தது. இதனால் அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story