குடிநீர் குழாயில் உடைப்பு
குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.
மதுரை
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி, பேரையூர் பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வண்ணம் உருவாக்கப்பட்ட சேடபட்டி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் உசிலம்பட்டி, பேரையூர் தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் வைகை அணையிலிருந்து சேடப்பட்டிக்கு கொண்டு செல்லப்படும் இந்த குழாயில் உசிலம்பட்டி அருகே கருக்கட்டான்பட்டி கண்மாய் அருகில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் மேல்நோக்கி பீய்ச்சி அடிக்கிறது.
மேலும் கடந்த ஒரு மாத காலமாக உசிலம்பட்டியின் பல்வேறு பகுதிகளில் கூட்டு குடிநீர் திட்ட குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வரும் சூழலில் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கைகள் எடுத்து உடைப்புகளை சரி செய்து குடிநீர் வீணாவதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story