கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு


கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு
x
தினத்தந்தி 28 April 2023 12:30 AM IST (Updated: 28 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டது.

தேனி

கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளான கூடலூர், கம்பம், உத்தமபாளையம், கோம்பை. பண்ணைப்புரம் ஆகிய பகுதிகளுக்கு லோயர்கேம்ப் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக லோயர்கேம்ப் பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் நேற்று கூடலூர் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் திருமண மண்டபம் அருகே சாலை விரிவாக்க பணி நடந்தது. அப்போது சாலையோரத்தில் இருந்த மரத்தின் வேர்கள் அகற்ற முயன்றபோது கோம்பை, பண்ணைப்புரம் பகுதிக்கு கொண்டு செல்லும் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதில் குடிநீர் வீணாகி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் குடிநீர் வடிகால் வாரியத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே உடைந்த குடிநீர் குழாயை விரைந்து சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story