மணல் கடத்தலுக்காக தரைப்பாலம் உடைப்பு


மணல் கடத்தலுக்காக தரைப்பாலம் உடைப்பு
x

பேரணாம்பட்டு அருகே மணல் கடத்தலுக்காக தரைப்பாலம் உடைக்கப்பட்டுள்ளது.

வேலூர்

பேரணாம்பட்டு அருகே அனந்தகிரி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் வழியாக ரங்கம்பேட்டை கானாறு செல்கிறது. ரங்கம்பேட்டை கானாற்றிலிருந்து தினமும் இரவு, பகலாக டிராக்டர்கள், மாட்டு வண்டிகள் மூலம் மணல் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

குண்டலப்பல்லி, சாத்கர் கிராமங்களின் மெயின் ரோடு வழியாக மணல் கடத்தி செல்லும்போது பொதுமக்கள் பிடித்து வருவதால் மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் அனந்தகிரி கிராமத்தில் தரைப்பாலம் அருகிலுள்ள வழியை பயன்படுத்தி மணல் கடத்தி வந்தனர்.

இந்த நிலையில் அனந்தகிரி கிராமத்தில் அரசு அமைத்துள்ள தரைப்பாலம் மணல் கடத்தலுக்கு பெரிதும் இடையூறாக இருப்பதால் பொக்லைன் எந்திரம் மூலம் தரைப்பாலத்தை உடைத்து மணல் கடத்தலுக்கு குறுக்கு வழியை ஏற்படுத்தி எளிதில் மணல் கடத்தலில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

பொதுமக்கள் சென்று வந்த தரைப்பாலத்தை உடைத்ததை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து கிராம மக்கள் வருவாய்த்துறை, போலீசில் முறையிட்டும் எவ்வித நடவடிக்கை எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. எனவே, அரசுக்கு சொந்தமான தரைபாலத்தை உடைத்து நாசப்படுத்தி மணல் கடத்தி வரும் நபர்கள் மீது மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story