குடிநீர் குழாய் உடைப்பு; வாகன ஓட்டிகள் அவதி


குடிநீர் குழாய் உடைப்பு; வாகன ஓட்டிகள் அவதி
x

ஸ்ரீவைகுண்டம் அருகே குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் நெல்லை-திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ள சிறிய குறுகலான பாலத்தின் கீழ் 2 இடங்களில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. பாலத்தின் கீழ் இருந்து அதிவேகத்தில் தண்ணீர் கீழிருந்து மேலாக பாலத்தின் மேல் சீறிப்பாய்ந்து வாகன ஓட்டிகள் மேல் விழுகிறது. இதனால் பஸ் மற்றும் இருசக்கர வாகனங்களின் உள்ளே தண்ணீர் வேகமாக விழுவதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். உடனடியாக சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பார்வையிட்டு குடிநீர் உடைப்பை சரிசெய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story