விதிமீறி பாறைகள் உடைப்பு


விதிமீறி பாறைகள் உடைப்பு
x
தினத்தந்தி 30 May 2023 5:15 AM IST (Updated: 30 May 2023 5:15 AM IST)
t-max-icont-min-icon

மேல் கூடலூரில் விதிமுறைகளை மீறி பாறைகளை உடைத்தது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி

கூடலூர்

மேல் கூடலூரில் விதிமுறைகளை மீறி பாறைகளை உடைத்தது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாறைகள் உடைப்பு

நீலகிரி மாவட்டம் இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பிரதேசமாக உள்ளது. இதனால் மண்ணின் வளத்தை பாதுகாக்க பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தவும் மற்றும் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் கல் குவாரிகளுக்கு ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் பாறைகளை உடைக்க தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

இந்தநிலையில் கூடலூர் அருகே மேல் கூடலூர் பகுதியில் விதிமுறைகளை மீறி மேடான இடங்களை சமப்படுத்தி, அதில் உள்ள பாறைகளை உடைத்து வணிக ரீதியாக பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

அதிகாரிகள் விசாரணை

இதையடுத்து மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவின் பேரில், கூடலூர் ஆர்.டி.ஓ. முகமது குதரதுல்லா, தாசில்தார் சித்ராஜ் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் பாறைகள் உடைக்கப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து விதிமுறைகளை மீறி பாறைகளை உடைத்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறும்போது, மேல் கூடலூர் பகுதியில் பாறைகள் உடைத்தது தொடர்பாக உரிய விசாரணை நடைபெற்று வருகிறது. விதிமுறைகளை மீறியதால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதியில் பல வாரங்களாக பாறைகள் உடைத்து அகற்றப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பலமுறை வருவாய் ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தும் எந்த தடுப்பு நடவடிக்கையும் எடுக்க வில்லை என்றனர்.


Next Story