டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு நாளையொட்டி முதியோர்களுக்கு காலை உணவு


டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு நாளையொட்டி முதியோர்களுக்கு காலை உணவு
x

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு நாளையொட்டி முதியோர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

திருச்சி

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 10-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி திருச்சி, கிராப்பட்டியில் உள்ள முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு தமிழ்நாடு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் காலை உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மன்ற மாநில பொருளாளர் ராஜாநசீர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட தலைவர் துளசிதாஸ், செயலாளர் மோகன்தாஸ், துணைத்தலைவர் சரவணன், துணை செயலாளர் சக்திவேல் மற்றும் தீபக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story