தஞ்சை மாவட்டத்தில் மேலும் 1,112 அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம்


தஞ்சை மாவட்டத்தில் மேலும் 1,112 அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம்
x

தஞ்சை மாவட்டத்தில் மேலும் 1,112 அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் மேலும் 1,112 அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. தொடங்கி வைத்தார்.

காலை உணவு திட்டம்

தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை மாநகராட்சியில் 16 பள்ளிகளிலும், கும்பகோணம் மாநகராட்சியில் 21 பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி நேற்று விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் ஊரக பகுதி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள 1087 தொடக்கப்பள்ளிகள், பட்டுக்கோட்டை நகராட்சியில் உள்ள 16 பள்ளிகள், அதிராம்பட்டினம் நகராட்சியில் உள்ள 8 பள்ளிகள், கும்பகோணம் மாநகராட்சியில் மேலும் ஒரு பள்ளி என மொத்தம் 1,112 பள்ளிகளுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 53 ஆயிரத்து 518 மாணவ, மாணவிகள் பயன்பெறுகிறார்கள்.

பழனிமாணிக்கம் எம்.பி.

தஞ்சையை அடுத்த மாரியம்மன்கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் திட்ட தொடக்க விழா நடந்தது. இதனை எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். அப்போது கலெக்டர் தீபக்ஜேக்கப், டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த், ஒன்றியக்குழு தலைவர் வைஜெயந்திமாலா கேசவன், மகளிர் திட்ட இயக்குனர் சாந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் அன்பரசன், வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, தாசில்தார் சக்திவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், பொற்செல்வி, ஊராட்சி மன்ற தலைவர் சுஜாதாதனசேகர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story