63 பள்ளிகளில் காலை உணவு திட்டம்


63 பள்ளிகளில் காலை உணவு திட்டம்
x

கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 63 பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 3,415 மாணவர்கள் பயன்பெறுவார்கள்.

நீலகிரி

கூடலூர்,

கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 63 பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 3,415 மாணவர்கள் பயன்பெறுவார்கள்.

காலை உணவு

தமிழககத்தில் 1 முதல் 5 வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 63 ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்ட தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். மகளிர் திட்ட இயக்குனர் ஜாகிர் உசேன் வரவேற்றார்.

ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், கூடலூர் ஆர்.டி.ஓ. சரவணகண்ணன், போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சாரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீ மதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பள்ளி குழந்தைகளுடன் அமைச்சர், கலெக்டர் அமர்ந்து சாப்பிட்டனர்.

3,415 மாணவர்கள்

இத்திட்டத்தின்படி தினமும் ஒவ்வொரு விதமான காலை உணவுகள் தயாரித்து வழங்கப்படுகிறது. காலை 8.30 மணி முதல் 9 மணிக்குள் சத்தான வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்கள் உணவு தயாரித்து வழங்க உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 63 ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்ட தொடங்கப்பட்டது. இதன் மூலம் மொத்தம் 3,415 மாணவ-மாணவிகள் பயன்பெறுவார்கள்.

நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீதர், மோகன் குமாரமங்கலம், முன்னாள் எம்.எல்.ஏ. திராவிட மணி, ஸ்ரீமதுரை ஊராட்சி தலைவர் சுனில் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஓவேலி பேரூராட்சி மரப்பாலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடந்த தொடக்க நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் சித்ராதேவி மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். ஓவேலி லாரஸ்டன் எண்.4 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பேரூராட்சி மன்ற துணை தலைவர் சகாதேவன் திட்டத்தை தொடங்கி வைத்தார்.



Next Story