திண்டிவனம் பகுதியில் ஒரே நாளில்10 வீடுகளில் புகுந்து செல்போன்கள் திருட்டுநள்ளிரவில் கைவரிசை காட்டிய மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு


திண்டிவனம் பகுதியில் ஒரே நாளில்10 வீடுகளில் புகுந்து செல்போன்கள் திருட்டுநள்ளிரவில் கைவரிசை காட்டிய மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 31 March 2023 12:15 AM IST (Updated: 31 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் பகுதியில் ஒரே நாளில் 10 வீடுகளில் புகுந்து செல்போன்களை திருடிச் சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

விழுப்புரம்

திண்டிவனம்,

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கிடங்கல் ராஜன் தெரு, கலைஞர் தெரு உள்ளிட்ட தெரு பகுதிகளில் வசிப்பவர்கள் நேற்று முன்தினம் இரவு காற்றோட்டத்துக்காக தங்களது வீடுகளின் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கினர். இதை நோட்டமிட்ட மர்மநபர், வீடுகளுக்குள் புகுந்து 15 செல்போன்களை திருடிச் சென்றுவிட்டார். காலையில் எழுந்து பார்த்தபோது, 10-க்கும் மேற்பட்ட வீடுகளை சேர்ந்தவர்கள் தங்களது செல்போன்களை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்ததோடு, இதுபற்றி திண்டிவனம் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, மா்மநபர் ஒருவர் நள்ளிரவில் வீடுகளுக்குள் புகுந்து செல்போன்களை திருடி, அதனை ஒரு பையில் போட்டு எடுத்துச் சென்ற காட்சி பதிவாகி இருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story