சினிமா தியேட்டரில் கண்ணாடி உடைப்பு; 4 பேர் கைது


சினிமா தியேட்டரில் கண்ணாடி உடைப்பு; 4 பேர் கைது
x
தினத்தந்தி 19 Jan 2023 12:15 AM IST (Updated: 19 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடையத்தில் சினிமா தியேட்டரில் கண்ணாடியை உடைத்ததாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி

கடையம்:

கடையம் போலீஸ் நிலையம் அருகே உள்ள சினிமா தியேட்டரில் பொங்கலை முன்னிட்டு வாரிசு, துணிவு என 2 படங்களும் திரையிட்டு வந்தனர். இந்தநிலையில் நள்ளிரவு காட்சிக்கு நடிகர் விஜய்யின் வாரிசு படம் பார்க்க ரசிகர்கள் வந்தனர். அப்போது ரசிகர்கள் கேண்டீனில் வாமிட் எடுத்ததாக கூறப்படுகிறது. அதனை சுத்தம் செய்ய ஊழியர்கள் கூறினர். இதில் ஊழியர்களுக்கும் ரசிகர்களுக்கும், வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து ரசிகர்கள் தியேட்டரின் முன் பக்க கண்ணாடிகளை உடைத்துள்ளனர். இதில் பறந்து வந்த உடைந்த கண்ணாடி, கீழக்கடையம் பெரிய தெருவை சேர்ந்த கணேசன் மகன் கோபிநாத் என்ற தியேட்டர் ஊழியரின் கையில் பட்டு காயம் அடைந்தார்.

இதுகுறித்து கோபிநாத் கொடுத்த புகாரின் பேரில் கடையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முப்புடாதி வழக்குப்பதிவு செய்து மேல அரியபுரம் குமாரசாமிபுரத்தை சேர்ந்த கணேசன் மகன் ராணுவ வீரர் ராமச்சந்திரன் என்ற சங்கர், சக்திவேல் (வயது 25), ராஜேஷ் (29), மாதவன் (19) ஆகிய 4 பேரை கைது செய்தார். மேலும் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்.


Next Story