குளங்களில் விதிகளை மீறி மண் அள்ளுவதாக புகார் :அதிகாரிகள் ஆய்வு
கம்பம் பகுதியில் உள்ள குளங்களில் விதிகளை மீறி அள்ளப்படுவதாக எழுந்த புகாரின்பேரில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தேனி
கம்பத்தில் உள்ள உடைப்படி, ஒட்டுக்குளம், மஞ்சள்குளம், கேசவபுரம் கண்மாய்களில் வண்டல் மண் அள்ளுவதற்கு விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டன. இதில் அரசு விதியை மீறி விவசாய நிலங்களுக்கு அனுமதி பெற்று வணிக நோக்கத்தோடு கட்டுமானம் மற்றும் செங்கல் சூளைகளுக்கு மண் அள்ளுவதாக மாவட்ட புவியியல் மற்றும் சுங்கத்துறை உதவி இயக்குனர் வினோத்திற்கு புகார் வந்தது. இதையடுத்து கம்பம் பகுதியில் உள்ள குளங்களில் ஆய்வு செய்வதற்காக அதிகாரிகள் நேற்று சென்றனர். இதற்கிடையே அதிகாரிகளை வருவதை அறிந்ததும் குளத்தில் மண் அள்ளி கொண்டிருந்தவர்கள் டிப்பர் லாரி, பொக்லைன் எந்திரங்களை எடுத்து கொண்டு அங்கிருந்து ஓடினர். பின்னர் அங்கு வந்த பொதுப்பணித்துறை பணியாளர்களிடம் குளத்தில் மண் அள்ளுவதற்கான அனுமதி சீட்டை வாங்கி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
Next Story