விவசாயி வீட்டின் கதவை உடைத்து ரூ.80 ஆயிரம் திருட்டு


விவசாயி வீட்டின் கதவை உடைத்து ரூ.80 ஆயிரம் திருட்டு
x

விவசாயி வீட்டின் கதவை உடைத்து ரூ.80 ஆயிரம் திருட்டு போனது.

புதுக்கோட்டை

கீரனூர்:

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே கீழ சவுரியார்பட்டினத்தை சேர்ந்தவர் செபஸ்டியான் (வயது 39). விவசாயி. நேற்று மதியம் இவரது மனைவி மற்றும் குழந்தைகள் வெளியூர் சென்று விட்டனர். இதையடுத்து வீட்டில் இருந்த செபஸ்டியான், அவரது தந்தையுடன் வயலுக்கு சென்று விட்டு மீண்டும் மாலை வீடு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதையடுத்து உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த ரூ.80 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் கீரனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யோகரெத்தினம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story