வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் திருட்டு


வீட்டின் கதவை உடைத்து  நகை-பணம் திருட்டு
x

வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் திருட்டு

மதுரை

திருமங்கலம்

திருமங்கலம் ஆண்டவன் கோவில் தெருவை சேர்ந்தவர் தேசிங்குராஜா. இவருடைய மனைவி ராதா (வயது 48). தேசிங்கு ராஜா தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். ராதா கப்பலூர் தொழில்பேட்டையில் வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் வழக்கம் போல் கணவன் மனைவி வேலைக்கு சென்று விட்டனர். இவர்களது மகன் கல்லூரிக்கு சென்று விட்டார். மகன் கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்ார். மேலும் இதுகுறித்து தனது தாயாருக்கு தெரிவித்தார். அவர் விரைந்து வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ஒரு பவுன் நகை, வெள்ளி கொலுசு, ரூ.15 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் திருமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story