வீட்டின் கதவை உடைத்து பொருட்கள் திருட்டு


வீட்டின் கதவை உடைத்து பொருட்கள் திருட்டு
x

மூலைக்கரைப்பட்டி அருகே வீட்டின் கதவை உடைத்து பொருட்களை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி அருகேஉள்ள சிந்தாமணி நடுத்தெருவை சேர்ந்தவர் வெங்கடாசலம் மகன் சுப்புராமன் (வயது 50). இவர் கேரளாவில் உள்ள கொட்டியம் என்ற இடத்தில் ஓட்டல் நடத்தி வருகிறார். இதனால் ஊரில் உள்ள அவரது வீடு பூட்டி கிடக்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பது குறித்து மூலைக்கரைப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆழ்வார் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தியபோது வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்து வீட்டில் இருந்த வெள்ளியால் ஆன விளக்குகள், கும்பா, டம்ளர் மற்றும் அலுமினிய பொருட்களை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story