வீட்டின் கதவை உடைத்து பெண்ணுக்கு கொலை மிரட்டல்


வீட்டின் கதவை உடைத்து பெண்ணுக்கு கொலை மிரட்டல்
x

மயிலாடுதுறையில் வீட்டின் கதவை உடைத்து பெண்ணுக்கு கொலை மிரட்டல்.கணவருக்கு, போலீசார் வலைவீச்சு

மயிலாடுதுறை

மயிலாடுதுறை சேர்ந்தங்குடி ஜோதி நகரை சேர்ந்தவர் உலகநாதன் மகன் விமல். இவரும் மயிலாடுதுறை கூறைநாடு ஆராயத்தெருவை சேர்ந்த முருகன் மகள் ஹசீனாவும்(வயது 29), கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக ஹசீனா கணவரை விட்டு பிரிந்து சென்று தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று மாமனார் வீட்டிற்கு சென்ற விமல், மனைவியை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். அப்போது ஹசீனா வீட்டின் கதவை மூடிவிட்டு உள்ளே சென்று விட்டார். இதனால் ஆத்திரமடைந்த விமல் வீட்டின் கதவை அடித்து உடைத்ததோடு, மனைவி ஹசினாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுபஸ்ரீ மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான விமலை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story