வீடுகளின் கதவை உடைத்து நகை-வெள்ளிப்பொருட்கள் திருட்டு
திருப்பரங்குன்றம், மதுரையில் வீட்டின் கதவை உடைத்து நகை- வெள்ளி பொருட்கள் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம், மதுரையில் வீட்டின் கதவை உடைத்து நகை- வெள்ளி பொருட்கள் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வெள்ளி பொருட்கள்
திருப்பரங்குன்றம் பெரியரதவீதி செட்டியார் காம்பவுண்டில் வசித்து வருபவர் சாந்தி. இவர் வீட்டை பூட்டி விட்டு திருப்பதிக்கு சாமி கும்பிட சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் பூட்டை உடைத்து வீட்டுக்குள் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் வீட்டில் இருந்த வெள்ளி குத்துவிளக்கு உள்பட 4½ கிலோ எடை மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர். இந்த நிலையில் வீடு திரும்பிய சாந்தி வீட்டில்பூட்டு உடைக்கப்பட்டு வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்தனர். தடயவியல் நிபுணர்கள், கொள்ளையர்கள் விட்டுச் சென்ற கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
மதுரை அவனியாபுரம் வைகை நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 55). கீரைத்துறை பகுதியில் மளிகை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர், அவரது மனைவி, மகன் ஆகியோர் வீட்டை பூட்டி விட்டு கடைக்கு சென்று விட்டனர். மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.
மேலும் வீட்டின் பீரோவில் வைத்திருந்த 25 ஆயிரம் ரூபாய் மற்றும் 3 கிராம் தங்க தோடு ஆகியவை திருடப்பட்டது தெரியவந்தது. இது குறித்து அவர் அவனியாபுரம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.