வீட்டின் பூட்டை உடைத்து 53 பவுன் நகை கொள்ளை
காரியாபட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 53 பவுன் நகைகளை மர்பநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
காரியாபட்டி,
காரியாபட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 53 பவுன் நகைகளை மர்பநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
இன்ப சுற்றுலா
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள தோணுகால் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 58). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்துடன் வீட்டைப் பூட்டிவிட்டு குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்ப சுற்றுலா சென்றுள்ளார்.
இந்நிலையில் பாலசுப்பிரமணியனின் உறவினர் ஒருவர் பூட்டியிருந்த வீட்டை பார்ப்பதற்காக சென்றார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
53 பவுன் நகை திருட்டு
இதுகுறித்து அவர் உடனடியாக மல்லாங்கிணறு போலீசாருக்கும், பாலசுப்பிரமணியனுக்கும் தகவல் தெரிவித்தார். இதையடுத்து மல்லாங்கிணறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிமுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பின்பக்க கதவை உடைத்து வீட்டின் உள்ளே சென்று மர்மநபர்கள் 2 பீரோக்களை உடைத்து 53 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.