வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
தேனியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி காஸ் மாஸ் கிளப் ரோடு ரத்னா நகரை சேர்ந்தவர் சஹானா (வயது 31). நேற்று முன்தினம் இவர், வீட்டை பூட்டி விட்டு ராமநாதபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று காலை இவரது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் சஹானாவுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து பதறியடித்து கொண்டு அவர் வீட்டிற்கு வந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீேராவில் இருந்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மற்றும் 28¼ பவுன் நகை திருடுபோய் இருந்தது.
இதுகுறித்து சஹானா அல்லிநகரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கதவை உடைத்து நகை, பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து இன்ஸ்பெக்டர் உஷா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.