வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு


வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
x

வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடி சென்றனர்.

விருதுநகர்

காரியாபட்டி,

காரியாபட்டி அருகே உள்ள கல்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சாந்தி (வயது 44). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் சாந்தி வீட்டை பூட்டிவிட்டு இரவு பணிக்காக சென்றார். பின்னர் மறுநாள் காலையில் வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 5 பவுன் நகையை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சாந்தி அளித்த புகாரின் பேரில் மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story