கோவில் பூட்டை உடைத்து குத்துவிளக்குகள் திருட்டு
தக்கலை அருகே கோவில் பூட்டை உடைத்து குத்துவிளக்குகள் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
கன்னியாகுமரி
தக்கலை:
தக்கலை அருகே கோவில் பூட்டை உடைத்து குத்துவிளக்குகள் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
தக்கலை அருகே உள்ள மூவாற்றுமுகம் பகுதியில் இசக்கியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பூஜையை முடித்து பூசாரி ேகாவிலை பூட்டி விட்டு சென்றார். நேற்று காலையில் அதிகாலை பூசாரி வந்தபோது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த 2 குத்துவிளக்குகள் மாயமாகி இருந்தன. யாரோ மர்ம நபர்கள் பூட்டை உடைத்து குத்துவிளக்குளை திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து கோவில் கமிட்டி துணைத்தலைவர் குமார் கொற்றிக்கோடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து குத்துவிளக்குகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story