கோவில் பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு
கோவில் பூட்டை உடைத்து பொருட்கள் திருடு போனது
மதுரை
திருமங்கலம்
திருமங்கலம் அருகே செங்குளம் கிராமத்தில் அய்யனார் சாமி கோவில் உள்ளது. இந்த கோவில் பூசாரியாக இருப்பவர் சாத்தங்குடியை சேர்ந்த பாண்டி(வயது 57). சம்பவத்தன்று கோவிலில் பூசாரி பாண்டி பூஜைகளை முடித்துவிட்டு கதவை பூட்டிவிட்டு வழக்கம் போல் வீட்டிற்கு சென்று விட்டார். அடுத்த நாள் காலையில் வந்து பார்த்தபோது சன்னதி கதவு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் அங்கு ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்த 6 பித்தளை மணி, பூர்ணகவசம், அய்யனார் சாமி கவசம் என ரூ.21 ஆயிரம் மதிப்புள்ள பூஜை பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக கோவில் பூசாரி பாண்டி கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story