மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம்
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது.
காட்பாடியில் உள்ள இந்திரா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, வேலூர் மோட்டார் சைக்கிள் சங்கம், பெண்கள் மோட்டார் சைக்கிள் சங்கம் ஆகியவற்றின் சார்பில் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடந்தது. மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் சங்கர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது மார்பக புற்றுநோய் குறித்த பரிசோதனை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் செய்யப்படுகிறது. பெண்கள் மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்வதற்கு கூச்சப்படுகின்றனர். பெண்கள் அனைவரும் மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். போதையில்லா தமிழகத்தை உருவாக்க நாங்கள் போலீசுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம் என்றார்.
சிறப்பு விருந்தினராக வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் கலந்து கொண்டு பேசுகையில், போதையில்லா தமிழகத்தை உருவாக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதற்காக பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன என்றார். அதைத் தொடர்ந்து அவர் போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழியை வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலத்தில் மோட்டார் சைக்கிள் சங்கத் தலைவர்கள் கார்த்திக், ஜெசிகா மற்றும் இளைஞர்கள், பெண்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர். மகப்பேறு டாக்டர் லதா லட்சுமி, காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.