மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி


மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

திருமருகலில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

தமிழகம் முழுவதும் அக்டோபர் 1 முதல் 31-ந் தேதி வரை மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவின் பேரிலும், துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் விஜயகுமார் வழிகாட்டுதல் படியும் திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாவட்ட சுகாதார நலக்கல்வியாளர் மணவாளன் முன்னிலை வசித்தார்.இதில் டாக்டர்கள், சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள், மருந்தாளுனர் மற்றும் மக்களை தேடி மருத்துவம் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் 30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மார்பக பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும். இலவச மார்பக பரிசோதனைகளை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. முடிவில் மார்பக புற்றுநோய் குறித்து உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.


Next Story