லஞ்சம் வாங்கி கைதான சர்வேயர் வீட்டில் ரூ.5 லட்சம் சிக்கியது
லஞ்சம் வாங்கி கைதான சர்வேயர் வீட்டில் ரூ.5 லட்சம் சிக்கியது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசலை சேர்ந்தவர் திவ்ய தர்ஷன். இவர் தன்னுடைய தாயார் பெயரில் நிலத்தின் பட்டாவை மாறுதல் செய்வதற்காக சென்றபோது காரைக்குடி நகர சர்வேயர் சரவணன், பட்டாமாறுதலுக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். இதுகுறித்து திவ்யதர்ஷன் சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
போலீசார் ஏற்பாட்டின்படி ரசாயன பவுடர் தடவிய ரூ.6 ஆயிரத்தை திவ்யதர்ஷன், சர்வேயர் சரவணனிடம் கொடுத்தபோது லஞ்ச ஒழிப்பு போலீசார், சரவணன் மற்றும் மணி ஆகியோரை கைது ெசய்தனர்.
இந்நிலையில் ேநற்று அதிகாலையில் திருப்புவனம் மன்னர் குடியிருப்பு மேல ரத வீதியில் உள்ள சரவணன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துணை சூப்பிரண்டு ஜான் பிரிட்டோ, இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், ஜேசுதாஸ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா முகமது மற்றும் போலீசார் சோதனை செய்தனர்.
இந்த சோதனையின்போது அவரது வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.5 லட்சம் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.