பழ வியாபாரியை தாக்கிய கொத்தனார் கைது


பழ வியாபாரியை தாக்கிய கொத்தனார் கைது
x
தினத்தந்தி 22 Nov 2022 12:45 AM IST (Updated: 22 Nov 2022 12:45 AM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டம் அருகே பழ வியாபாரியை தாக்கிய கொத்தனார் கைது

கன்னியாகுமரி

குழித்துறை,

மார்த்தாண்டம் அருகே உள்ள மருதங்கோடு பகுதியை சேர்ந்தவர் அனந்தராஜ் (வயது65), வியாபாரி. அந்த பகுதியில் பழக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த கொத்தனார் சசிகுமார் (42) பழக்கடைக்கு சென்று ஒரு கிலோ பழம் கேட்டார்‌. அனந்தராஜ் பழத்தை எடை போட்டு கொடுத்தார். அப்போது, சசிகுமார் அந்த பழத்தை மீண்டும் எடைபோடுமாறு கூறினார். மீண்டும் எடை போட்ட போது அது ஒரு கிலோ 100 கிராம் எடை இருந்தது. எனவே அனந்தராஜ் அதிகமாக இருந்த 100 கிராம் பழத்திற்கும் சேர்த்து ரூபாய் கேட்டார்.

இதனால், அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சசிகுமார் தனது கையில் இருந்த குடையால் அனந்தராஜின் முகத்தில் குத்தி தாக்கினார். இதில் காயமடைந்த அனந்தராஜ் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து அனந்தராஜ் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து சசிகுமாரை கைது செய்தனர்.


Next Story