சேலம் திருமலைகிரியில் கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை


சேலம் திருமலைகிரியில் கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை
x

சேலம் திருமலைகிரியில் கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சேலம்

இரும்பாலை:

சேலம் திருமலைகிரி ஆதிதிராவிடர் காலனி பகுதியை சேர்ந்தவர் அர்ச்சுனன். இவருடைய மகன் சிவராஜ் (வயது 28). கொத்தனார். இவருக்கு திருமணமாகி மீனா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர், சிவராஜிக்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சிவராஜிடம் கோபித்து கொண்டு மனைவி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த சிவராஜ் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து இரும்பாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சாரதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.



Next Story