திருமணம் ஆகாத ஏக்கத்தில் ரெயில் முன் பாய்ந்து கொத்தனார் தற்கொலை
இரணியல் அருகே திருமணம் ஆகாத ஏக்கத்தில் கொத்தனார் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
திங்கள்சந்தை:
இரணியல் அருகே திருமணம் ஆகாத ஏக்கத்தில் கொத்தனார் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
தண்டவாளத்தில் பிணம்
இரணியல் அருகே கண்டன்விளை பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் நேற்று மதியம் ஒருவர் நடந்து சென்றார். அப்போது அவர் மீது கன்னியாகுமரியில் இருந்து புனலூர் நோக்கி சென்ற பயணிகள் ரெயில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும், நாகர்கோவில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் ஜெயபால் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பழனி, விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
திருமண ஏக்கத்தில் விபரீதம்
அப்போது இறந்தவர் வில்லுக்குறி மாடத்தட்டுவிளை மேற்கு தெருவை சேர்ந்த கென்சிலின் பிரபு (வயது 39), கொத்தனார் என்றும், அவருக்கு திருமணம் ஆகாததால், மனமுடைந்து ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ததும் தெரிய வந்தது.
இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமண ஏக்கத்தில் கொத்தனார் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.