செங்கற்கள் தலையில் விழுந்து மேஸ்திரி சாவு


செங்கற்கள் தலையில் விழுந்து மேஸ்திரி சாவு
x

கட்டிட பணியின் போது செங்கற்கள் தலையில் விழுந்து மேஸ்திரி உயிரிழந்தார்.

நாகப்பட்டினம்

மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் அச்சுதராயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது 70). கட்டிட மேஸ்திரியான இவர், மயிலாடுதுறை கூறைநாடு குருக்கள் பண்டாரத் தெருவில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார். வீடு கட்டும் பணியின்போது திடீரென மேலிருந்து செங்கற்கள் சரிந்து கீழே விழுந்துள்ளது. அப்போது அங்கு நின்ற மேஸ்திரி சண்முகம் தலையிலும், கட்டிட தொழிலாளி செல்வகுமார் என்பவர் கால்களிலும் செங்கற்கள் விழுந்துள்ளன. இதில் தலையில் பலத்த காயமடைந்த சண்முகம் மற்றும் செல்வகுமார் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேஸ்திரி சண்முகம் பரிதாபமாக உயிரிழந்தார்.. மேலும் செல்வகுமார் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story