ஜண்டாமேடு-இக்பால் ரோடு இடையே ரூ.3½ கோடியில் பாலம்


ஜண்டாமேடு-இக்பால் ரோடு இடையே ரூ.3½ கோடியில் பாலம்
x

வாணியம்பாடி ஜண்டாமேடு-இக்பால் ரோடு இடையே ரூ.3½ கோடியில் பாலம் அமைப்பது குறித்து நகராட்சி தலைவர் ஆய்வுசெய்தார்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி நகரின் பிரதான சாலைகளை இணைக்கும் பகுதியான ஜண்டாமேடு பகுதியில் உள்ள பாலம் மிகவும் பழுதடைந்து காணப்பட்டு வருகிறது. இந்தப் பாலத்தின் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், விவசாயிகள் சென்று வருகின்றனர்.

எனவே அந்த பகுதியில் புதிய பாலம் அமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி நகர மன்ற தலைவர் உமா சிவாஜி கணேசன், நகர தி.மு.க. செயலாளர் வி.எஸ்.சாரதி குமார் ஆகியோர் முயற்சியால் இக்பால் ரோடு- ஜண்டாமேடு பகுதியை இணைக்கும் பழுதடைந்த பாலத்தை அகற்றி விட்டு புதிதாக சி.ஜி.எப் நிதியின் கீழ் ரூ.3½ கோடி செலவில் புதிய பாலம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

அதற்கான ஆயத்த பணிகளை நகராட்சி அதிகாரிகளுடன் நகரமன்ற தலைவர் உமா சிவாஜி கணேசன், நகர தி.மு.க. செயலாளர் வி.எஸ்.சாரதி குமார் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பாலம் விரைவில் கட்டப்படும் என நகர மன்ற தலைவர் தெரிவித்தார்.


Next Story