பேராவூரணி ஆனந்தவல்லி வாய்க்காலில் உடைந்த நிலையில் பாலம்


பேராவூரணி ஆனந்தவல்லி வாய்க்காலில் உடைந்த நிலையில் பாலம்
x

பேராவூரணி ஆனந்தவல்லி வாய்க்காலில் உடைந்த நிலையில் பாலம்

தஞ்சாவூர்

பேராவூரணி:

பேராவூரணி ஆனந்தவல்லி வாய்க்காலில் உடைந்த நிலையில் உள்ள பாலத்தை இடித்துவிட்டு புதிதாக பாலம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனந்தவல்லி வாய்க்கால்

தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் ஆனந்தவல்லி வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த வாய்க்காலின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம் தற்போது உடைந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த பாலம் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் விபத்து ஏற்படுமோ? என்ற அச்சத்துடன் உள்ளனர்.

மேலும் ஆனந்தவல்லி வாய்க்காலில் கொட்டப்படும் குப்பைகளால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் கடைமடைக்கு தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.

புதிய பாலம் கட்டித்தர வேண்டும்

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விபத்துஏற்படும் முன்பு உடைந்த நிலையில் உள்ள பேராவூரணி ஆனந்தவல்லி வாய்க்கால் பாலத்தை இடித்துவிட்டு, புதிதாக பாலம் கட்டித்தர வேண்டும். மேலும் ஆனந்தவல்லி வாய்க்காலில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story