பாலம் சீரமைப்பு பணி- மதுரை வழியாக நெல்லை செல்லும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம்


பாலம் சீரமைப்பு பணி- மதுரை வழியாக நெல்லை செல்லும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம்
x
தினத்தந்தி 9 Aug 2023 1:41 AM IST (Updated: 9 Aug 2023 4:13 PM IST)
t-max-icont-min-icon

பாலம் சீரமைப்பு பணி காரணமாக மதுரை வழியாக நெல்லை செல்லும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யபட்டுள்ளது.

மதுரை

மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட நெல்லை ரெயில் நிலைய பகுதியில் உள்ள பாலம் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக ஒரு சில ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நெல்லை-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில் (வ.எண்.06675) மற்றும் திருச்செந்தூர்-மணியாச்சி எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில் (வ.எண்.06680) இன்று (புதன்கிழமை) ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல, தாம்பரத்தில் இருந்து நேற்று இரவு நாகர்கோவில் புறப்பட்ட அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.20691) விருதுநகருடன் நிறுத்தப்படுகிறது. மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.20692) நாகர்கோவிலில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக விருதுநகரில் இருந்து இன்று வழக்கமான நேரத்துக்கு தாம்பரம் புறப்பட்டு செல்லும். பாலக்காடு-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16731) இன்று கோவில்பட்டியுடன் நிறுத்தப்படும். மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.16732) இன்று திருச்செந்தூரில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் இருந்து வழக்கமான நேரத்துக்கு புறப்பட்டு செல்லும். நெல்லை-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில் (வ.எண்.06409) இன்று நெல்லையில் இருந்து மாலை 4 மணிக்கு பதிலாக சுமார் 2 மணி நேரம் தாமதமாக மாலை 6 மணிக்கு புறப்படும்.


Related Tags :
Next Story