பாலம் விரிவாக்க பணிகளை இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. ஆய்வு


பாலம் விரிவாக்க பணிகளை இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. ஆய்வு
x

அம்பையில் பாலம் விரிவாக்க பணிகளை இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

திருநெல்வேலி

அம்பை:

அம்பை மெயின் ரோட்டில் நெடுஞ்சாலைத் துறையினரால் பாலம் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாலம் விரிவாக்க பணிகளையொட்டி, மாற்றுவழியில் போக்குவரத்து இயக்கப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே பாலம் விரிவாக்க பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ. அறிவுறுத்தினார்.

தொடர்ந்து அம்பை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம் வழங்கப்பட்டது. அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கூனியூர் மாடசாமி, ஒன்றிய செயலாளர்கள் அம்பை விஜயபாலாஜி, சேரை மாரிச்செல்வம் நகர செயலாளர்கள் அம்பை அறிவழகன், விக்கிரமசிங்கபுரம் பலவேச கண்ணன், மணிமுத்தாறு முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் சிவன்பாபு, அம்பை நகராட்சி கவுன்சிலர்கள் மாரிமுத்து, சிவக்குமார், விக்கிரமசிங்கபுரம் நகராட்சி கவுன்சிலர் கிறாஸ் இமாகுலேட், முன்னாள் அரசு வக்கீல் செல்வந்தோணி மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story