மின்வாரியத்தின் வருவாயை பெருக்குவது குறித்த விளக்கக் கூட்டம்


மின்வாரியத்தின் வருவாயை பெருக்குவது குறித்த விளக்கக் கூட்டம்
x

மின்வாரியத்தின் வருவாயை பெருக்குவது குறித்த விளக்கக் கூட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

ஆம்பூரில், திருப்பத்தூர் மின் பகிர்மான வட்டம், பள்ளிகொண்டா கோட்டம் சார்பில் மின்வாரியத்தின் வருவாயை பெருக்குவதில் பணியாளர்கள் மற்றும் அலுவலர்களின் பொறுப்புகள் மற்றும் கடமைகள் என்ற தலைப்பில் விளக்க கூட்டம் நடைபெற்றது. கூடுதல் தலைமை பொறியாளர் (திருப்பத்தூர்) பன்னீர்செல்வம் தலைமை தாங்கி வருவாயை பெருக்குவதில் ஒவ்வொருவரின் பொறுப்புகள் மற்றும் கடமைகள் குறித்து எடுத்துரைத்தார்.

பள்ளிகொண்டா கோட்ட செயற்பொறியாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். உதவி செயற்பொறியாளர்கள், கோட்ட அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு வருவாயை பெருக்கிட உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


Next Story