வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பது குறித்து விளக்க கூட்டம்


வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பது குறித்து விளக்க கூட்டம்
x

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பது குறித்து விளக்க கூட்டம் நடந்தது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பது தொடர்பான விளக்க கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி பேசுகையில் வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடிக்கு நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் விருப்பத்தின் அடிப்படையில் படிவம் 6 பி மூலமாக ஆதார் எண்களின் விவரங்களை தெரிவிக்கலாம். வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நேரடியாக வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்து தன் விருப்பத்தின் அடிப்படையில் ஆதார் எண் விவரங்களை படிவம் 6பி மூலமாக பெற்று சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு அலுவலர்கள் மூலமாக வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண் இணைக்கும் பணியினை மேற்கொள்வார்.

இ சேவை மையம், மக்கள் சேவை மையம் ஆகியவை மூலமாகவும் படிவம் 6பி மூலம் தங்களது ஆதார் எண்ணை, வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கலாம். வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணிக்கான சிறப்பு முகாம்கள் அடுத்த மாதம் 4-ந் தேதி முதல் நடைபெற இருக்கிறது. வாக்காளரிடம் ஆதார் அட்டை இல்லை எனில் அரசு வழங்கி உள்ள 11 வகை சான்றில் ஏதாவது ஒரு சான்றின் நகலை வாக்காளர்கள் சமர்ப்பிக்கலாம் என தெரிவித்தார்.


Next Story