புத்தொளி பயிற்சி அளிக்க வேண்டும்


புத்தொளி பயிற்சி அளிக்க வேண்டும்
x

புத்தொளி பயிற்சி அளிக்க வேண்டும்

திருப்பூர்

பல்லடம்

கோவில் பூசாரிகள் நலச்சங்க மாநிலத் தலைவா் வாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின்கீழ் உள்ள அா்ச்சகா்கள், ஓதுவாா்கள், பட்டாச்சாரியாா்கள் ஆகியோருக்கு ஆண்டுதோறும் புத்தொளி பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பூசாரிகளுக்கும் அனுமதி வழங்க வலியுறுத்தி பூசாரிகள் நலச் சங்கத்தின் சாா்பில், சென்னை உயா்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம், பூசாரிகளின் கோரிக்கையை ஏற்று புத்தொளி பயிற்சி வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், புத்தொளி பயிற்சி முகாம் கடந்த 1 ந் தேதி தொடங்கிய நிலையில் தற்போது வரை பூசாரிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. எனவே, சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றி பூசாரிகளுக்கும் புத்தொளி பயிற்சி அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story