கடன் பிரச்சினையால் கறிக்கோழி கடைக்காரர் தற்கொலை


கடன் பிரச்சினையால் கறிக்கோழி கடைக்காரர் தற்கொலை
x

கடன் பிரச்சினையால் கறிக்கோழி கடைக்காரர் தற்கொலை செய்து கொண்டார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் நாசர்(வயது 56). இவர் உடையார்பாளையம் கடைவீதியில் கறிக்கோழி கடை நடத்தி வந்தார். வியாபாரம் சம்பந்தமாக தொழிலில் ஏற்பட்ட கடன் பிரச்சினையால் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டில் யாரும் இல்லாதபோது வயலுக்கு அடிக்க வைத்து இருந்த பூச்சி மருந்தை (விஷம்) எடுத்துக்குடித்து மயக்க நிலையில் கிடந்தார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அரியலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் நாசர் மனைவி மும்தாஜ் புகார் அளித்தார். புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story